இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக 6 மில்லியனுக்கும் அதிக மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளமை கவனிப்புக்குரியதாகும்.
புத்தளம் - வணாத்தவில்லு, லக்டோஸ் தோட்டத்தில், வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கின், ஆரம்பமே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் இன்றைய நிலையோ பரிதாபத்துக்குரியது. இந்த நாட்டின் வரலாற்றில் என்றுமே ஏற்படாத ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டு மற்ற நாடுகளிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்துகிற அளவுக்கு சீரழிந்துள்ளது. அதைப்பற்றி பல உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் அவதானிகளும் விமர்சகர்களும் பொருளியலாளர்களும் அறிவாளிகளும் தமது கருத்துக்களை விபரமாகப் பதிவு செய்துள்ளனர்.
என்.டி.எச்.அப்துல் கபூர் நம்பிக்கை நிதியம் ஒரு இஸ்லாமிய கருணைகொடை நம்பிக்கை நிதியமோ அல்லது சட்டத்தின் கீழான ஒரு கருணைகொடை நம்பிக்கை நிதியமோ அல்ல. எனவே குறிப்பிட்ட நம்பிக்கை நிதியம் முஸ்லிம் பள்ளிவாசல்கள் கருணைக்கொடை நம்பிக்கை நிதியமோ அல்லது 1956 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க வக்பு சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டதல்ல.