18 வயதை நிர்ணயம் செய்வதால் இளவயதுத் திருமணத்தை இல்லாதொழிக்க முடியுமா?
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தினால் ஆளப்படுகின்ற முஸ்லிம் சமூகத்தில் திருமணத்திற்கான வயதெல்லையை 18 ஆக நிர்ணயித்தல் தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சமூகத்தில் இளவயதுத் திருமணங்களை இல்லாதொழித்தல் என்ற தலைப்பின் கீழ் இந்த விவாதம் இடம்பெறுவதைக் காணலாம்.