முஸ்லிம் கைதிகளை நிர்வாணமாக்கி ஆசனவாயிலில் ஊசியை செருகுவர்

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் கைதி ஒருவர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்­படும் போது, விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் அவர்கள் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வது வழக்கம். குறித்த கைதி முஸ்­லி­மாக இருந்தால், அவர்­க­ளது ஆடை­களை களைந்து நிர்­வா­ண­மாக நிற்கச் சொல்லி, ஆச­ன­வா­யிலில் ஒரு ஊசியைச் செருகி, விளக்கு வெளிச்­சத்தைப் பாய்ச்சி சோதனை செய்வர் என கவிஞர் அஹ்னாப் ஜஸீம் தனது ட்விட்டர் பதி­வொன்றில் தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் மக்களின் சமய உரிமைகளை உறுதிப்படுத்துக

கொவிட் தொற்றின் போது முஸ்லிம் சமூ­கத்தை ஓரங்­கட்­டும்­வ­கை­யிலும் அவர்கள் மீது பாகு­பா­டு­களை அதி­க­ரிக்கும் வித­மா­கவும் அர­சாங்கம் தீர்­மானம் எடுத்­தது. தற்­போது கொவிட் தொற்றால் உயி­ரி­ழந்­தோரை அடக்கம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருப்­பினும் முஸ்­லிம்­களின் சமய உரி­மை­களை உறு­தி­ப­டுத்­து­மாறு இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பிரே­ர­ணையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சகல பள்ளிவாசல்களுக்கும் விரைவில் பொதுவான யாப்பு

நாட்டில் இயங்­கி­வரும் அனைத்துப் பள்­ளி­வா­சல்­க­ளையும் யாப்பு ஒன்றின் கீழ் இயங்கச் செய்­த­வற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது. பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்கள் யாப்பு இன்றி இயங்­கி­வ­ரு­வதால் பல்­வேறு குழப்­பங்கள் பதி­வாகி வரு­வ­தா­கவும் திணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

பள்ளிவாசல் நிர்வாகங்கள் வக்பு சொத்துக்கள் குறித்து..

நாட்டில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களின் எண்­ணிக்கை சுமார் 2544 ஆகும். அத்­தோடு நூற்­றுக்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் பதி­வின்­றியே இயங்கி வரு­கின்­றன.