மஜ்மாநகர் இலங்கை முஸ்லிம்களின் ‘ஆஸ்விற்ஸ்’ ஆகுமா?
ஜேர்மனியின் ஆஸ்விற்ஸ் சித்திரவதை முகாம் யூத இனத்துக்கு ஹிட்லர் வழங்கிய மயான பூமி. இனவெறி கொண்ட ஹிட்லரின் யூத இன ஒழிப்பின் நினைவுத் தலமாக அது இன்றும் என்றும் விளங்கும். இன்று வாழும் யூத மக்களும் இனிமேல் வாழப்போகும் யூத சந்ததிகளும் கண்ணீருடன் தரிசித்து மௌன அஞ்சலி செலுத்தும் ஒரு வரலாற்றுத் தலம் அது.