குச்சவெளியில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குறியும் முஸ்லிம் பிரபலங்களின் மௌனமும்
இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அம்மாகாணங்களின் தமிழ்சார்ந்த பாரம்பரியத்தையும் அதன் தனித்துவத்தையும் நீக்கி அல்லது குறைத்து, காலப்போக்கில் அம்மாகாணங்களையும் சிங்கள பௌத்த மாகாணங்களாக மாற்றவேண்டும் என்ற கனவு அப்பேரினவாதிகளிடையே சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்தே குடிகொண்டிருந்தது.