சர்வகட்சி அரசாங்கத்துக்கான பேச்சுகள் ஆரம்பம் அதாவுல்லாஹ்வுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

சர்­வ­கட்சி அர­சாங்­கத்தை அமைப்­பது தொடர்பில் அர­சியல் கட்­சி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல்கள் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றன. ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற குறித்த பேச்­சு­வார்த்­தை­களின் மூன்­றா­வது கலந்­து­ரை­யா­டல் தேசிய காங்­கி­ர­ஸுடன் இடம்­பெற்­ற­தோடு, அதன் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம். அதா­வுல்லா உள்­ளிட்ட குழு­வினர் இதில் கலந்­து­கொண்­டனர்.

இன, மதவாத கொள்கைக்கு எதிராக செயற்படுவேன்

பேதங்கள் மூலம் எமது நாடு முற்­காலம் தொட்டு பின்­ன­டை­வு­க­ளுக்கு உள்­ளா­னது. அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சில தரப்­பி­னர்கள் இப்­பி­ரி­வினை மேலும் விஸ்­த­ரித்­தனர். முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்கு இடையே பிரச்­சி­னை­களை உரு­வாக்­கி­ய­துடன் தமிழ்ர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடை­யிலும் குரோ­தங்­களை தோற்­று­வித்­தனர். பிரி­வு­க­ளற்ற இலங்­கை­யெனும் ஆள­டை­யா­ளத்தைக் கொண்ட சமூ­க­மொன்­றினை உரு­வாக்க முயற்­சித்­ததால் நான், அர­சியல் ரீதி­யாக தோல்­வி­களை சந்­தித்தேன்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் : வழக்குகளிலிருந்து ரணில் விடுவிக்கப்படுவாரா?

போது­மான உளவுத் தக­வல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களை தடுக்க தவ­றி­யதன் ஊடாக, தமது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக கூறி தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள 12 அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களில், பிர­தி­வா­திகள் பட்­டி­யலில் இருந்து தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­கு­வதா இல்­லையா என்­பது தொடர்பில் உயர் நீதி­மன்றம் தனது தீர்­மா­னத்தை அறி­விப்­பதை ஒத்தி வைத்­துள்­ளது.

தேசபந்து மீதான தாக்குதல்: இஸ்மத் மௌலவி நாளை அடையாள அணிவகுப்புக்கு

மேல் மாகா­ணத்­திற்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேச­பந்து தென்­னகோன் மீது முன்­னெ­டுக்­கப்­பட்ட தாக்­குதல் தொடர்பில், மக்கள் போராட்­டங்­களில் முன்­னணி போராட்டக்கார­ராக திகழ்ந்த இஸ்மத் மெளவி கைது செய்­யப்­பட்­டுள்ளார்.