சவூதியின் தேசியதின உபசாரத்தில் ஞானசாரர்!
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற சவூதி அரேபியாவின் 92வது தேசியதின விருந்துபசாரத்தில் இலங்கையின் பிரதமரும் மற்றும் அமைச்சர்கள் சிலரும் முஸ்லிம் தலைவர்களும் பங்குபற்றியிருந்தனர். ஆனால் அவர்களுள் பொதுபல சேனையின் சர்ச்சைக்குரிய செயலாளர் ஞானசார தேரரும் அழைக்கப்பட்டிருந்தமை முஸ்லிம் சமூகத்துக்குள் பல விமர்சனங்களை தோற்றுவித்துள்ளன.