இஸ்லாம் ஒரு புற்றுநோய் என வெளியிட்ட கருத்து தொடர்பான வழக்கு: ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துங்கள்
இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில், தொடர்ச்சியாக மன்றில் ஆஜராகாத பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பித்தது.