புதிய அரசியலமைப்பில் மொழி உரிமைகள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம்
இலங்கையினுடைய அரசியலமைப்பு வரலாறு என்பது 1833 ஆம் ஆண்டு கோல்புரூக் கமரன் சீர்திருத்தத்துடன் அரம்பமாகின்றது. குறித்த அரசியலமைப்பில் ஆங்கிலம் அரச கரும மொழியாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் அரச கரும மொழியாக ஆங்கிலம் இருக்கும் நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் மேலோங்கியது.