முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட விவகாரம்: புதிய குழுவுக்கு அறிக்கை சமர்பித்தது ஜம்இய்யதுல் உலமா
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் தலைமையிலான குழுவிற்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்துள்ளது.