மாகொல முஸ்லிம் அநாதை நிலையம் : வளங்களும், சொத்துக்களும் சூறையாடப்படுகின்றதா?
மாகொல முஸ்லிம் அநாதை நிலையம். இலங்கையில் அநாதரவான சிறுவர்களை பராமரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றே அது. கடந்த 1962 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி 30 மாணவர்களோடு இந் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் தனவந்தர்கள் சிலரின் முயற்சியின் பலனாக இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட அநாதை நிலையம், இன்று 60 வருடங்களை பூர்த்தி செய்து, இலங்கையில் முஸ்லிம் அநாதை சிறுவர்களுக்கான கல்விச் சேவையை தொடர்கிறது எனலாம்.