470 நாட்களின் பின்னர் காஸாவில் போர் நிறுத்தம்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அம­லுக்கு வந்­தி­ருப்­பதால் காஸாவில் 470 நாட்­க­ளுக்குப் பிறகு மீண்டும் அமைதி திரும்­பி­யுள்­ளது. போர் நிறுத்த ஒப்­பந்­தப்­படி, இஸ்ரேல் சிறை­களில் அடைக்­கப்­பட்­டுள்ள பலஸ்­தீன கைதிகள் விடு­த­லைக்கு ஈடாக, ஒவ்­வொரு கட்­ட­மாக ஹமாஸ் தன் வச­முள்ள இஸ்­ரே­லிய பண­யக்­கை­தி­களை விடு­விக்கும். விடு­விக்­கப்­படும் ஒவ்­வொரு இஸ்­ரே­லிய பண­யக்­கை­திக்கும் 30 பலஸ்­தீன கைதி­களை இஸ்ரேல் சிறை­களில் இருந்து விடு­விக்க வேண்டும் என்­பது நிபந்­தனை.

கட்டாய ஜனாஸா எரிப்பு: விசாரணைகளை ஆரம்பித்த சி.சி.டி.

கட்­டாய ஜனாஸா எரிப்பு குறித்து குற்­ற­வியல் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. கொரோனா தொற்றால் உயி­ரி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்­களை கட்­டாய தகனம் செய்த நட­வ­டிக்­கையின் பின்னால் உள்ள சதியை வெளிப்­ப­டுத்­தவும், இன­வாத நோக்­கங்­களை கண்­ட­றிந்து நீதியை நிலை­நாட்­டு­மாறும் கோரி பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பா­டொன்று பதிவு செய்­யப்­பட்­டது.

கிழக்கில் தொடர்ச்சியாக கனமழை மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு

கிழக்கு மாகா­ணத்தில் தொடர்ச்­சி­யாக நிலவி வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த சில தினங்­க­ளாக பெய்து வந்த கன­மழை இம்­மா­கா­ணத்தில் சற்று குறை­வ­டைந்­தி­ருந்த போதிலும் நேற்று அதி­காலை முதல் மீண்டும் மழை­யு­ட­னான கால­நிலை நிலவி வரு­கின்­றது. சீரற்ற கால­நிலை கார­ண­மாக கிழக்கு மாகா­ணத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஆயி­ரக்­க­ணக்­கானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பாடசாலை மாணவி கடத்தல் விவகாரம்: தவுலகல பொலிஸ் நிலைய‌ பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்;இருவருக்கு இட‌மாற்றம்

தவு­ல­கல பொலிஸ் நிலை­யத்தின் பதில் பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிய பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சம்பத் ரண­சிங்க பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ளார். கண்டி, தவு­ல­கல பொலிஸ் பிரிவில், மேல­திக வகுப்­புக்­காக சென்­று­கொண்­டி­ருந்­த­போது கடத்­தப்­பட்ட பாட­சாலை மாணவி விவ­கா­ரத்தில், உட­ன­டி­யாக செயற்­பட்டு நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யமை தொடர்பில், பொலிஸ் கட­மை­களை நிறை­வேற்­றாமை தொடர்பில் அவரை இவ்­வாறு பணி இடை நிறுத்தம் செய்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் தெரி­வித்­தது.