பயில் நிலை பிக்குகள் மூவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் : கல்முனை விகாராதிபதி கைது நாளை வரை விளக்கமறியலில்
பெளத்த விகாரையில் வைத்து பயில் நிலை பிக்குகள் மூவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் (13) அவரை விஷேட பொலிஸ் குழு கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.