போதைப்பொருள் பாவனையிலிருந்து முஸ்லிம் இளைஞர்களை பாதுகாப்பதற்கு பள்ளிவாசல்கள் ஒத்துழைக்க வேண்டும்
நாட்டில் போதைப்பொருள் பாவனையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். போதைப் பொருளிலிருந்து முஸ்லிம் இளைஞர்களை மீட்டெடுப்பதற்கு பள்ளிவாசல்கள் ஒத்துழைக்க வேண்டும். நாடெங்குமுள்ள பள்ளிவாசல்களில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவேண்டும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தன்னைச் சந்தித்த அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்தார்.