ஐ.நா. வாக்கெடுப்பில் பலஸ்தீனை ஆதரிக்குக

பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பைக் கண்­டிக்கும் வகையில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் விரைவில் இடம்­பெ­ற­வுள்ள வாக்­கெ­டுப்பில் இஸ்­ரே­லுக்கு எதி­ரா­கவும் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வா­கவும் இலங்கை வாக்­க­ளிக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை: சிறுபான்மை மக்களுக்கு அநீதியிழைக்கக்கூடாது

எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அநீ­தி­யி­ழைக்­கப்­படக் கூடாது என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரிஷாட் பதி­யுதீன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

சிறுநீரக கடத்தல் விவகாரம்: ‘திட்டமிட்ட சூழ்ச்சி’

சிறு­நீ­ரக மோசடி மற்றும் பணம் பறிப்பு உட்­பட முழு குற்றச்சாட்டுகளும் ஒரு திட்­ட­மிட்ட, சூழ்ச்­சி­யான ஊடக நிகழ்ச்சி நிர­லுக்கு உட்­பட்­டது என கொழும்பு - பொரளை வெஸ்டேர்ன் தனியார் வைத்­தி­ய­சாலை சுகா­தார அமைச்சின் அதிகாரிகளுக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள மனுவில் பேரா­சி­ரியர் ரிஸ்வி ஷெரீப் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வார்த்தை ஜாலங்களால் இனப்பிரச்சினை தீராது

நாட்டின் இனப் பிரச்­சி­னைக்கு எதிர்­வரும் 75 ஆவது சுதந்­திர தினத்­திற்கு முன்னர் தீர்வு காணப்­பட வேண்டும் என்றும் அதற்­காக சகல அர­சியல் கட்­சி­களும் ஒன்­று­பட வேண்டும் என்றும் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார். இனப் பிரச்­சினை தீர்வு தொடர்பில் கடந்த வாரம் இடம்­பெற்ற சர்வ கட்சி மாநாட்­டி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.