இன்று பல்கலைக்கழகங்களில் பயிலும் சில பெளத்த பிக்கு மாணவர்கள் ஸஹ்ரானைப் போன்றவர்கள். தலைமயிர் மற்றும் தாடி வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். லெனின் கொள்கைகளைப் பின்பற்றிக்கொண்டு இவர்கள் தலிபான்கள் போன்று செயற்படுகின்றார்கள். தலிபான்கள் செய்யும் வேலைகளையே செய்கிறார்கள் என மிகிந்தலை ரஜமகாவிகாரையின் அதிபதி வலவாஹென்குனவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். கடந்த 18 ஆம் திகதி இரவு 10.10 மணியளவில், முகத்தை மறைத்துக்கொண்டு தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி, முன்னெடுத்த துப்பாக்கிச் சூட்டில் பர்சான் உயிரிழந்தார்.
மர்ஹும் மொகிதீன் பேக் இலங்கைக்கு வருகை தந்து 100 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் விழா ஒன்றை எடுப்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தீர்மானித்துள்ளார்.