முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நயீமுதீன் நியமனம்

பொது நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் மேல­திகச் செய­லா­ள­ராக பணி­யாற்­றிய எம்.எம். நயீமுதீன், முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சின் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

தம்புள்ளை பள்ளியின் அபிவிருத்திக்கு நான் தொடர்ந்து நிதி உதவியளிப்பேன்

‘தம்­புள்­ளையில் முஸ்­லிம்கள் தமது வணக்க வழி­பா­டு­களை தொடர்ந்தும் எவ்­வித இடை­யூ­று­க­ளு­மின்றி மேற்­கொள்­வ­தற்கு அரச காணி வழங்­கப்­பட்­டது. இதற்­கான ஏற்­பா­டு­களை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யுடன் இணைந்து நானே முன்­னெ­டுத்தேன். புதிய காணியில் பள்­ளி­வா­சலை நிறுவ நானும் நிதி­யு­தவி வழங்­கி­யுள்ளேன். பள்­ளி­வா­சலின் அபி­வி­ருத்­திக்கு தொடர்ந்தும் உத­வுவேன்.’ என தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­ம­கா­வி­காரை சங்க சபாவின் தலைவர் இனா­ம­லுவே சுமங்­கல தேரர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

பெண்கள் காதிகளாக நியமிக்கப்படுவர்

காதி நீதி­ப­தி­க­ளாக பெண்­க­ளையும் நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு தேவை­யான திருத்­தங்­களை முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக என நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

சமரசப் பேச்சுவார்த்தையும் சாணக்கியத்திறனற்ற தலைமைகளும்

இலங்­கையின் இன்­றைய இனப்­பி­ரச்­சினை அர­சியல் அதி­கார நல­னுக்­காக அர­சி­யல்­வா­தி­களால் ஏழு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் விதைக்­கப்­பட்டு நீரூற்றி வளர்க்­கப்­பட்ட ஒரு நச்சு விருட்சம். இப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்கும் முக­மாக இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட முயற்­சிகள் அத்­த­னையும் அந்த விருட்­சத்தின் ஒரு சில கிளை­களை மட்டும் நறுக்கி வீசி­விட்டு மரத்தைக் காப்­பாற்றும் நோக்­க­மா­க­வேதான் அமைந்­தன என்று கூறு­வதில் எந்தத் தவறும் இல்லை.