தவிர்க்கப்பட வேண்டிய விபத்துக்களும் நாகரிகமற்ற செயல்களும்
நாட்டில் கடந்த சில தினங்களில் இடம் பெற்ற வாகன விபத்துகள் பல உயிர்களைப் பலியெடுத்துள்ளன. இக்கோர விபத்துக்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
கடந்த 20 ஆம்திகதி முதல் நேற்று முன்தினம் 24 ஆம் திகதி வரை இடம்பெற்ற நான்கு வாகன விபத்துகளில் மொத்தம் 11 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9 பேர் முஸ்லிம்களாவர்.