இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : ஆவணங்கள் எதுவுமே இல்லை எப்படி நிரூபிக்க போகிறீர்கள்?

'நவ­ரசம்' என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவி­ஞ­ருக்கு எதி­ராக எந்த சான்றுப் பொருட்­க­ளையும், ஆவ­ணங்­க­ளையும் முன்­வைக்க வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் உத்­தே­சிக்­க­வில்லை என நேற்று நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது.

பள்ளிவாசல், குழு மோதல்கள் சமரசத்தை ஏற்படுத்த உலமா சபை முயற்சி

நாட்டின் சில பகு­தி­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­களில் அண்மைக் கால­மாக இடம் பெற்­று­வரும் குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல் சம்­ப­வங்கள், முரண்­பா­டு­க­ளை­ய­டுத்து அரச புல­னாய்வுப் பிரிவு அவ்­வா­றான பள்­ளி­வா­சல்­களின் விப­ரங்­களைச் சேக­ரித்து வரும் நிலையில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை இவ்­வா­றான மோதல் சம்­ப­வங்கள் ஏற்­ப­டாத வண்ணம் தடுக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கி­றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்புடைய பயங்கரவாதிகளை தூக்கிலிட வேண்டும்

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுடன் நேர­டி­யாக தொடர்­பு­டைய பயங்­க­ர­வா­திகள் என்று கூறப்­ப­டு­ப­வர்கள் நிச்­ச­ய­மாக தூக்­கி­லி­டப்­பட வேண்டும். அவர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும் என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி வலி­யு­றுத்­தி­யுள்ளார்.