விபத்தில் மரணித்த கணிதவியல் கலாநிதி ஜுமான்

பேரா­தனை பல்­க­லைக்­க­ழக கணி­தத்­துறை செயற்­பாட்டு ஆராய்ச்­சியின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி சில்மி ஜுமான் கடந்த சனிக்­கி­ழமை குரு­நாகல் பொல்­பி­டி­கம என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் வபாத்­தானார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரம் :ஹிஜாப் அணிந்து சுஹைரியா மத்ரஸாவுக்கு சென்றாரா சாரா?

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கில், அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ள­ராக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் புத்­தளம், அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்­படும் மொஹம்மட் நசார் மொஹம்மட் மலிக்கின் சாட்­சியம் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளது.

வைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு

குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவை எதிர்­வரும் மே 16 ஆம் திகதி பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்ள உயர் நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது.

மாவனெல்லை இரட்டை கொலை: பர்ஹான் உள்ளிட்டோர் சிக்கினர் வெல்லம்பிட்டி படுகொலை தொடர்பிலும் சந்தேக நபர்கள் கைது

மாவ­னெல்­லையை சேர்ந்த இரு இளை­ஞர்­களின் படு கொலை தொடர்பில், ரம்­புக்­கனை பகு­தியின் பிர­பல ஐஸ் போதைப் பொருள் வர்த்­தகர் என கூறப்­படும் ஹுரீ­ம­லுவ பர்ஹான் என அறி­யப்­படும் மொஹம்மட் பர்ஹான் உள்­ளிட்ட அனைத்து சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.