முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் அமைத்தால் இலங்கையை சர்வதேசம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்
முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசாங்கம் அமைத்தால் சர்வதேச நாடுகள் இலங்கையை எவ்வாறு ஏற்றுக்கொள்ளும். கருத்தடை, கொத்து ரொட்டி, கருத்தடை டாக்டர், கருத்தடை ஆடை என்கிறீர்கள். என்னதான் நீங்கள் செய்யவில்லை? ஏனைய இன மக்கள் மீது குரோதம், பகைமையை ஏற்படுத்தும் அரசாங்கமொன்று இருந்தால் உலகில் யார் எமது நாட்டை ஏற்றுக்கொள்வார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.