தனியார் சட்ட திருத்தம் பெண் காதிகளை நியமிக்க கூடாது

‘பெண் காதி­நீ­தி­ப­தி­களை நிய­மிப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட முடி­யாது. அவ்­வாறு நிய­மிப்­பது எமது மார்க்க வழி­காட்­ட­லுக்கு முர­ணா­னது. அத்­தோடு பல­தார மணம் எமது சட்­டத்­தி­லி­ருந்து நீக்­கப்­படக் கூடாது’ எனும் கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜ­ரொன்­றினை ‘ஸ்ட்ரெந்தன் எம்.எம்.டீ.ஏ’ அமைப்பு நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாஸ ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளித்­துள்­ளது.

திணைக்களத்துக்கு வராமலேயே ஹஜ் பதிவுக் கட்டணத்தை மீள பெறலாம்

கடந்த காலங்­களில் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்­காக பதி­வுக்­கட்­டணம் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்ள விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பதி­வுக்­கட்­ட­ண­மான 25 ஆயிரம் ரூபாவை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வ­லகள் திணைக்­க­ளத்­துக்கு நேரில் விஜயம் செய்­யா­மலே பெற்­றுக்­கொள்ள முடி­யு­மென அரச ஹஜ்­கு­ழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.

கொவிட் தொற்று காலத்தில் வெளியிட்ட ஜும்ஆத் தொழுகை தொடர்பான சுற்று நிருபத்தை இரத்து செய்க

கொவிட் 19 தொற்று காலத்தில் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையை ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ர­மன்றி ஏனைய பள்­ளி­வா­சல்கள் மற்றும் தக்­கி­யாக்­க­ளிலும் தொழ­மு­டியும் என்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள சுற்று நிரு­பத்தை இரத்துச் செய்து ஜும்ஆ தொழுகையை ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களில் மாத்­தி­ரமே தொழ­மு­டியும் என்­பதை பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அறி­விக்­கும்­படி வக்பு சபை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தைக் கோரி­யுள்­ளது.

காணாமல் போன 4 வாழைச்சேனை மீனவர்கள் 64 நாட்களின் பின் அந்தமானில் கண்டுபிடிப்பு

செப்­டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆழ்­க­ட­லுக்குச் சென்று காணாமல் போன வாழைச்­சேனை பகு­தியைச் சேர்ந்த நான்கு மீன­வர்­களும் அந்­தமான் தீவில் கண்டுபிடிக்­கப்­பட்­டுள்­ளனர்.