பாதுகாப்பு பேரவை சட்டமாக்கப்படும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மூலம் பொது மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கடந்த ஜனவரி 12 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பில், தேசிய பாதுகாப்பானது, அரசியலமைப்பின் அடிப்படையிலும் தெளிவான அமைப்புடனும் நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தை பரிந்துரைத்துள்ள நிலையில், அதனை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.