சம்மாந்துறை செந்நெல் கிராம கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபா பள்ளிவாசல் வீதி செந்நெல் கிராமம்- 1 பிரிவினை சேர்ந்த 11 வயதுடைய அமீர் அன்சீப் என்ற சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்குவாரி குட்டை ஒன்றில் குளிக்கச் சென்றபோது உயிரிழந்தார். சம்மாந்துறை செந்நெல் சாஹிரா வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்ற இம்மாணவன் குடும்பத்தில் 10 ஆவது பிள்ளையாவார்.