ஹஜ் முகவர்களுக்கான நியமனங்கள் வழங்க அரச ஹஜ் குழு நடவடிக்கை
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் முகவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஹஜ் முகவர் நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேற்று முன்தினம் பெப்ரவரி 28ஆம் திகதியுடன் விண்ணப்பிக்கும் இறுதித் திகதி முற்றுப் பெற்றுள்ளது.