உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு எதிரான தீர்ப்பு ஐ.நா. ஆணைக்குழு வரவேற்பு

2019 ஆம் ஆண்டு இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட்­பட சிரேஷ்ட அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக இலங்­கையின் உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள தீர்ப்பை வர­வேற்­றுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு முழு­மை­யான நஷ்­ட­யீடும் நீதியும் கிடைப்­ப­ததை அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

நஷ்டயீடுகளால் மாத்திரம் நீதி வழங்க முடியாது

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டயீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.

அமைப்பை மாற்றாமல் ஆட்சியாளர்களை மாற்றுவதில் பயனில்லை

எதிர்­வரும் தேர்­தல்­க­ளுக்கு தகு­தி­வாய்ந்த வேட்­பா­ளர்­களை கள­மி­றக்க வேண்டும் என்ற தேடலில் முஸ்லிம் சமூக ஆர்­வ­லர்கள் ஈடு­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கதே. ஆனால் அதற்­குமுன் ஒரு முக்­கிய உண்­மையை அனை­வரும் உணர்தல் நல்­லது.

முஸ்லிம் சமூகத்தின் மீது ஏன் இந்த பாரபட்சம்?

சில அரச நிறு­வ­னங்­க­ளுக்கும், நாட்டின் முஸ்லிம் சமூகம் மற்றும் அதன் அங்­க­மாகத் திகழும் நிறு­வ­னங்­க­ளுக்கும் இடையே தொடரும் பகைமை அல்­லது பனிப்போர், முஸ்லிம் சமூ­கத்தில் ஆழ­மான கரி­ச­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.