இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது சவூதி அரேபியா

சவூதி அரே­பி­யாவின் மன்னர் சல்மான் மனி­தா­பி­மான உத­விகள் மற்றும் நிவா­ர­ணங்­க­ளுக்­கான மையம் இலங்­கைக்கு 50 தொன் பேரீச்­சம்­ப­ழங்­களை நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளது. சவூதி அரே­பி­யாவின் இலங்­கைக்­கான தூதுவர் கலித் ஹமூத் அல்-­கஹ்­தானி, புத்­த­சா­சனம் மற்றும் மத கலா­சார அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­கா­விடம் இந்த பேரிச்­சம்­ப­ழங்­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளித்தார்.

சாரா தப்பிச் செல்ல உதவியதாக கூறி கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் அபூபக்கருக்கு பிணை

நீர்­கொ­ழும்பு கட்­டு­வா­பிட்­டிய தேவா­லயம் மீது நடத்­தப்­பட்ட தற்­கொலை தாக்­கு­தலின் குண்­டு­தா­ரி­யான மொஹம்மட் ஹஸ்­தூனின் மனை­வி­யான, 2 ஆம் கட்ட தாக்­கு­த­லுக்கு தயா­ராக இருந்­த­தாக கூறப்­படும் புலஸ்­தினி ராஜேந்திரன் அல்­லது சாரா ஜஸ்மின் அல்­லது சாரா தப்பிச் செல்ல உத­வி­ய­தாக சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் என்.ரி. அபூ­பக்­கரை பிணையில் விடு­வித்து நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

கபூ­ரிய்யாவை பாதுகாப்பதற்காக கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

கபூ­ரிய்யா அர­புக் ­கல்­லூ­ரியின் வக்பு சொத்தைப் பாது­காப்­ப­தற்­கான அமை­திப்­போ­ராட்­ட­மொன்று நேற்று கொழும்பு செத்­தாம்­ வீதி கோட்டை பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

வக்பு சொத்­துக்கள் பறிபோவதை தடுக்க ஒருங்­கி­ணைந்த உடனடி நடவடிக்கை அவ­சியம்

சமூ­க மார்க்க நிறு­வ­னங்­களும் அவற்­றுக்கு சொந்­த­மான வளங்­களும் சமூக இருப்பின் அத்­தி­வா­ரங்­க­ளாகும். இந்த அத்­தி­வா­ரங்­களை ஆட்டம் காணச் செய்யும் அல்­லது முற்­றா­க ஒழித்­த­ழிக்கும் எந்த ஒரு நட­வ­டிக்­கையும் சமூ­கத்தின் எதிர்­கால இருப்­பையே நாச­மாக்­கி­விடும். எனவே தான் சமூக நிறு­வ­னங்­க­ளுக்­கு­ரிய சொத்­துக்­களை பாது­காப்­பது எல்­லோ­ரு­டைய தலை­யாய கடமை­யாகும்.