ஏறாவூர் முஸ்லிம் பிரதேசத்திற்குள் வரும் புன்னைக்குடா வீதி எனும் பொதுப் பெயரை சிங்களப் பெயராக மாற்ற ஆளுநர் உத்தரவு
தொன்று தொட்டு “ஏறாவூர் புன்னைக்குடா வீதி” என புழக்கத்திலிருந்து வரும் புன்னைக்குடா வீதியின் பெயரை “எல்விஸ் வல்கம” வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளது பிரதேசத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.