2023 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்திரை தொடர்பான பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 105 ஹஜ் பயண முகவர்களை உத்தியோபூர்வமாக நியமித்துள்ளது.
ரமழான் மாத இறுதியில் அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் தொலைபேசி இலக்கமான 118 இற்கு தகவல் வழங்கியவர் குறித்து விசாரணைகள் நடத்துமாறு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரியுள்ளார்.
ரமழான் அன்பளிப்பாக சவூதி அரேபியா அரசு இலங்கைக்கு வழங்கிய 50 தொன் பேரீத்தம் பழங்கள் நாடு தழுவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ள 2265 பள்ளிவாசல்களுக்கு 14 கிலோ வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
கண்டி -அக்குரணை பகுதியில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற உளவுத் தகவலை அடுத்து, அப்பகுதி பூரண இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (18) இரவு முதல் இந்த பாதுகாப்பு நடைமுறை அமுல் செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.