அஷ்ரபின் கனவும், தென்கிழக்கு பல்கலைக்கு கையளிக்கப்படும் ஒலுவில் இல்லமும்
முஸ்லிம் சமூக, அரசியலைப் போல அல்லது முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்டிருந்த கனவுகளைப் போல… நீண்டகாலமாக கவனிப்பாரற்று, காடாகிக் கிடந்த அஷ்ரபின் ஒலுவில் இல்லம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது. மர்ஹூம் அஷ்ரபின் பாரியார் பேரியல் அஷ்ரப் மற்றும் அவரது புதல்வர் அமான் அஷ்ரப் ஆகியோரினால் இதற்கான ஆவணம் தற்போதைய பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட்டிடம் கையளிக்கப்பட்டுள்ளது.