ஒவ்வொரு சமூகத்திலும் சில மனிதர்கள் தமக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ்வதுண்டு. அவ்வாறு பிறர்நலம் கருதி வாழ்பவர்கள்தான் வரலாறு படைக்கிறார்கள். அவர்களாலேதான் சமூகம் மேம்படுகிறது.
கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி நாடளாவிய ரீதியில் பிரபல்யமான மகளிர் அரபுக் கல்லூரியாகும். குறித்த அரபுக்கல்லூரியானது இலங்கையின் முதலாவது மகளிர் அரபுக்கல்லூரி (1959) என வரலாறு கூறுகின்றது. ஆனால் இன்று அக்கல்லூரியில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகள், நோக்கத்துக்கு அப்பாற்பட்ட நடைமுறைகள் பொது வெளியிலே பேச்சுக்களை உருவாக்கியுள்ளன.
உலகக் கோப்பைக் கிண்ணத்தை பாகிஸ்தான் வெல்வதற்கு வழிவகுத்த பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான இம்ரான் கான், இன்று உலக அரசியலில் அதிக அவதானம் பெறும் நபராக மாறியுள்ளார்.
இலங்கையில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரகம் மற்றும் இலங்கை அரபுலக இராஜதந்திரிகள்கவுன்ஸில் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘நக்பா’ பேரிடர் தினத்தின் 75 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு கடந்த திங்கட்கிழமை(22) கொழும்பு 07 இல் அமைந்துள்ள சர்வதேச உறவுகள்மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.