டிஜிட்டல் சத்துணவு
போஷாக்கு மிக்க உணவு பழக்கம் என்பது சத்து நிறைந்த உணவு வகைகளை உரிய வேளைக்கு தேவைக்கு ஏற்ற அளவில் பொறுப்புடன் நுகர்வதை குறிக்கும். நாம் ஆரோக்கியமாக வாழ சிறந்த உணவு பழக்கம் அவசியமானது. போஷாக்கான உணவு எமது ஆரோக்கியத்தை மாத்திரமன்றி, எமது அறிவு, கல்வி வளர்ச்சி, சமூக செயற்பாடு என்பனவற்றிலும் தாக்கம் செலுத்துகின்றது. இதேபோன்று, டிஜிட்டல் சத்துணவு பழக்கம் என்பது அறிவினை வளர்த்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நமது இயலுமையை ஊக்குவிக்கும் சிறந்த உள்ளடக்கங்களை நுகர்வதாகும்.