சீ! சீ! இதுவா தலைமைத்துவம்?
ஒரு முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதி துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்து, சுங்க அதிகாரிகளின் கைகளிலே சிக்கியபின் தன்னை காப்பாற்றுமாறு ஜனாதிபதி அலுவலகத்தையே கேட்டு ஏமாந்து பாரிய பணத்தொகையை அபராதமாகச் செலுத்தியபின் விடுபட்டு மீண்டும் அவசர அவசரமாக துபாய்க்குச் சென்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.