கொவிட் 19 தொற்றினால் மரணித்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியாது; எரிக்கவே முடியும் எனும் அறிவுபூர்வமற்ற கொள்கையை நடைமுறைப்படுத்திய ஒரே நாடு இலங்கையே என்பதை உலகமே அறியும்.
இந்தத் தலைப்பை பற்றி ஆவணப்பட இயக்குனர் நாதியா பெரேராவின் வரலாற்று முக்கியம்பெற்ற படைப்பொன்றை அண்மையில் யூரியுப் வழியாகப் பார்த்து ரசிக்க நேர்ந்தது. அது இலங்கை முஸ்லிம்களின் கலாச்சாரச் செழிப்புக் காலமொன்றை நினைவுக்குக் கொண்டு வந்ததாலும், அதனை அச்சமூகத்தின் இளம் சந்ததியினர் மறந்து வாழ்வதையிட்டு மனம் நொந்ததாலும், அந்த முதுசத்துக்குப் புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்பதாலும் இக்கட்டுரையை எழுதத் துணிந்தேன்.