சூடானுக்கு 100 மில்லியன் டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது சவூதி

சவூதி அரே­பிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் பட்­டத்து இள­வ­ரசர் பிர­த­மர்­ இ­ள­வ­ரசர் முஹம்­மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் ஆகியோர், சூடான் மக்­க­ளுக்­காக, 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் மதிப்­பி­லான பல்­வேறு மனி­தா­பி­மான உத­வி­க­ளை­ வ­ழங்­கு­மாறும், அம்­மக்கள் தற்­போது அனு­ப­வித்து வரும் இன்­னல்­களின் விளை­வு­களைத் தணிக்­க “­சாஹிம்” தளத்தின் மூலம் ஒரு பாரிய பிர­சா­ரத்தை ஏற்­பாடு செய்­யு­மாறும், மன்னர் சல்­மான்­ ம­னி­தா­பி­மான உத­விகள் மற்றும் நிவா­ரண மையத்­திற்கு…

ஓமான் ஆடை நிறுவனம் : கட்டுநாயக்க முதலீட்டு வலயத்துக்கு இடமாற்றம்

நீர் கொழும்பு - படல்­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹல்பே பகு­தியில் ஓமான் முத­லீட்­டாளர் ஹல்பான் அல் அல் உபைதி மீது இரா­ஜாங்க அமைச்சர் ஒரு­வரின் அர­சியல் அதி­கார பின்­னணி கொண்ட கும்பல் ஒன்று தாக்­குதல் நடத்­தி­யமை மற்றும், அவ­ரது ஆடை தொழிற்­சாலை மீதான தொடர்ச்­சி­யான அச்­சு­றுத்­தல்கள் தொடர்பில் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் சிறப்புக் குழு­வொன்று விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிலையில், அந்த ஆடை தொழிற்­சாலை கட்­டு­நா­யக்க முத­லீட்டு ஊக்­கு­விப்பு வல­யத்­துக்கு இட­மாற்­றப்­ப­ட­வுள்­ளது.

ஹிஜாஸுக்கு எதிராக அச்சுறுத்தி சாட்சியம் பெற முயன்ற விவகாரம்: 4 சிறுவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட உரிமை மீறல் மனுக்கள் விசாரணைக்கு…

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக சாட்­சியம் வழங்­கு­மாறு அழுத்தம் கொடுத்து, பெற்­றோரின் பொறுப்பில் இருந்த சிறு­வர்­களை தாம் சி.ஐ.டி.யினர் எனக் கூறி அழைத்துச் சென்று அச்­சு­றுத்தி ஆவ­ணங்­களில் பலாத்­கா­ர­மாக கையெ­ழுத்து வாங்­கி­ய­தாக கூறி நான்கு சிறு­வர்கள் சார்பில் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை விசா­ர­ணைக்கு ஏற்­ப­தாக அறி­விக்­கப்பட்­டுள்­ளது.

ஓமான் முதலீட்டாளர் மீதான தாக்குதல் குறித்து பூரண விசாரணை நடத்தப்படும்

ஓமான் முத­லீட்­டாளர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் முறை­யான விசா­ரணை இடம்­பெ­ற­வில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதனால் இது­தொ­டர்­பாக பூரண விசா­ரணை மேற்­கொண்டு, அதன் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுப்பேன் என நீதி அமைச்சர் விஜே­தாச ராஜபக்ச தெரி­வித்தார்.