‘உயிர் தப்பி இங்கு வந்தோம் இயலுமான விதத்தில் உதவுங்கள்’
'எம்மீது குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன், ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டன. நாம் தப்பிச்செல்வதற்கு எமக்கென ஒரு இடமும் இல்லை. எமது நாட்டில் ஐக்கிய நாடுகள் அலுவலகம், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் என்பன எப்போதோ மூடப்பட்டுவிட்டன. ஈற்றில் உயிர் தப்பி இங்கு வந்து சேர்ந்தோம். இயலுமான விதத்தில் எமக்கு உதவுங்கள். இல்லாவிடின் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் இயங்கிவரும் பிறிதொரு நாட்டுக்கு எம்மை அனுப்பிவையுங்கள்.'