வீதி விபத்துக்களை குறைக்க சட்டம் இறுக்கமாகுமா?
மன்னம்பிட்டி கொட்டலிய பாலத்தில் பஸ் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் முழு நாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச் சம்பவத்தில் 11 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.