முஸ்லிம் கவுன்ஸிலிடத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெளிவு வேண்டுகிறது
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் சம்பந்தமான முன்மொழிவை வழங்கியதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய கருத்துகளையும் குறித்த சட்டத்திருத்தத்தின் முன்மொழிவில் வரவேண்டிய திருத்தங்களையும் முன்வைத்தார்கள். அதில் 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருக்கிறார்கள்.