தமிழ் பேசும் உலகில் புகழ் பூத்த கலைஞராகப் பெயர் பெற்ற கவிஞர் கலைவாதி கலீல் அவர்கள் கடந்த ஒன்பதாம் திகதி பாணந்துறை எழுவிலயில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
பேருவலையில் 19.08.1973 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா இவ்வருடம் அதன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. இந்தக் கலாநிலையம் நாடறிந்த கொடை வள்ளல் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.நளீம் அவர்களது சிந்தனையில் கருவுற்று அக்காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் இருந்த மிக முக்கியமான புத்திஜீவிகளதும் சமூக ஆர்வலர்களதும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களின் அடியாக உருப்பெற்றது.
2023ஆம் ஆண்டுக்கான அரச ஹஜ் குழுவிற்கு எதிராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் புத்தசாசன மற்றம் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடம் எழுத்துமூல முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான அந்த குண்டுத் தாக்குதல்களால் பலர் அன்று தமது வீடுகளுக்குள் முடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.