தொல்லியல் தீவிரவாதம்!
தேசியவாதத்தையும், இனவாதத்தையும் பரப்பும் ஒரு கருவியாக வரலாற்றையும், தொல்லியலையும் பயன்படுத்திக் கொள்வது இலங்கை அரசுகள் வழமையாக பின்பற்றி வந்திருக்கும் ஒரு நடைமுறை. சிங்கள – பௌத்தம் முன்வைத்து வரும் அந்த பெரும் கதையாடலுக்கு (Grand Narrative) எவரேனும் சவால் விடுக்கும் பொழுது எல்லோரும் பதற்றமடைகிறார்கள்.