இலங்கையில் இறப்புக்கள் அதிகரித்து பிறப்புக்கள் குறைகின்றன- இது எதிர்காலத்திற்கான எச்சரிக்கையா?
இலங்கையில் வருடாந்த இறப்பு வீதம் அதிகரித்திருக்கின்ற அதேவேளை பிறப்பு வீதம் கணிசமாகக் குறைந்திருப்பதாக துறைசார்ந்தவர்களால் வெளியிடப்பட்டிருக்கின்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.