பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புக்களில், 5 அமைப்புக்களின் தடையை முற்றாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழுள்ள நிறுவனங்கள் என்பனவற்றின் சொத்துகள் உள்ளிட்ட விபரங்களை வழங்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரைக் கோரியுள்ளார்.
இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 இல் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. இந் நிலையில், அந்த கொடூர சம்பவத்தை தடுக்கத் தவறியவர்கள் தொடர்பில் இலங்கையின் உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்து, நேற்று 12ஆம் திகதி புதன்கிழமையுடன் 6 மாதங்கள் நிறைவடைந்தது.
மீண்டும் ஒரு விபத்து எம் கிராமத்துக் கரைகளை உலுப்பி விட்டிருக்கின்றது. இதில் உயிரிழந்த அப்பாவிகளின் உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது யார்? மன்னம்பிட்டி விபத்து சொல்லும் செய்தி என்ன?