வில்பத்து விவகாரம்: ரிஷாத்துக்கு எதிரான மேன் முறையீட்டு மன்றின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு
பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசிய பூங்கா காட்டுப் பகுதியில், கல்லாறு சரணாலயத்தில் காட்டை அழித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அழிக்கப்பட்ட வனப்பகுதியை மீள உருவாக்க, அவர் அப்பகுதியில் தனது சொந்த செலவில் மரம் நட வேண்டும் எனவும், மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இடை நிறுத்தி உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.