ஹஜ் யாத்திரையை வினைத்திறனாக ஒழுங்கமைக்க ஹஜ் குழு நடவடிக்கை
ஹஜ் யாத்திரை செல்வதற்கு பதிவு செய்தவர்கள் பெப்ரவரி 14ஆம் திகதிக்கு முன்னர் தங்களது முகவர் நிறுவனங்களை சந்தித்து பயண ஏற்பாடுகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அத்துடன் தெரிவு செய்யப்பட்டுள்ள 92 முகவர் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த முகவர் நிறுவனங்களுக்கும் தங்களின் கடவுச்சீட்டை வழங்கவேண்டாம் என ஹஜ் குழுவின் தலைவர் ரிஸ்வி மிஹுலார் தெரிவித்தார். எதிர்வரும் ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை முஸ்லிம் சமய கலாசார…