பெண் செயற்பாட்டாளர் ஜுவைரியாவுக்கு உயர் விருது

முஸ்லிம் பெண்கள் அபி­வி­ருத்தி நம்­பிக்­கை­ய­கத்தின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பாளர் ஜுவை­ரியா மொஹிதீன், பெண்­களின் மனித உரிமைச் செயல்­பாட்­டிற்கு, குறிப்­பாக பெண்கள் மற்றும் குழந்­தை­களின் உரி­மை­களைப் பாது­காப்­பதில் பங்­க­ளிப்­பினை ஆற்­றி­ய­மைக்­காக சர்­வ­தேச மன்­னிப்புச் சபை­யின அமெ­ரிக்க கிளை­யினால் வழங்­கப்­படும் 2023 ஆம் ஆண்­டுக்­கான ஜினெட்டா சாகன் விரு­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.

இலஞ்சக் குற்றச்சாட்டில் காதிநீதிவான் கைதானார்

கொழும்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த காதி நீதிவான் ஒருவர் இலஞ்சக் குற்­றச்­சாட்டின் பேரில் நேற்று முன்­தினம் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டு கறுவா தோட்ட பொலிஸில் ஒப்­ப­டைக்கப்பட்­டார்.

அனைத்து நாடுகளின் நிதியங்களும் நிறுத்தப்பட்டுள்ளன சவூதி மாத்திரமே எமக்கு நிதியளிக்கிறது

எமது நாட்­டுக்கு ஆசிய அபி­வி­ருத்தி வங்கி உட்­பட ஏனைய நாடு­களின் நிதி­யங்கள் தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ளன. ஆனால் சவூதி நிதி­யத்தால் எமக்கு கிடைத்­து­வந்த பணம் நிறுத்­தப்­ப­டாமல் தொடர்ந்­து கிடைத்து வரு­கி­றது. அதற்­காக நாங்கள் சவூதி அர­சாங்­கத்­துக்கு நன்றி தெரி­விக்­கிறோம் என அமைச்சர் பந்­துல குண­வர்த்­தன தெரி­வித்தார்.

அலி சப்ரி ரஹீமை எம்.பி பதவியிருந்து நீக்க ஐக்கிய தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை

தங்கம் கடத்­திய குற்­றச்­சாட்­டுக்­குள்­ளான புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீமை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பின் செய­லாளர் நாயகம் எம். நயீ­முல்லாஹ் இணக்கம் வெளி­யிட்­டுள்­ள­தாக தெரியவருகிறது.