அடுத்த பாபர் மசூதி குருந்தூர் மலையா?
இலங்கையின் சமீப கால வரலாற்றை எடுத்து நோக்கினால் தொல்பொருள் என்பது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களிடையே பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடிய ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது. அதிலே குருந்தூர் விகாரை விவகாரம் தற்போது குமுறிக்கொண்டுள்ள ஒரு எரிமலையாக உருவெடுத்துள்ளது.