மரண விசாரணை அதிகாரிகளுக்கு எதிரான முறையற்ற நடவடிக்கைகளை நிறுத்துங்கள்
நாட்டில் மரணங்கள் சம்பவிக்கும்போது சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் மரண விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக சில பிரதேசங்களில் தேவையற்ற விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படுவதை நிறுத்தி, அவர்களுக்கு நியாயம் வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார் .