ஜனநாயகத்துக்கு எதிரான சட்டங்கள் வேண்டாம்
அரசாங்கம் தற்போது வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சட்டத்தரணிகளும் மனித உரிமை அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இச் சட்டமூலம் தற்போது அமுலிலிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கொடியது என இதனை வர்ணித்துள்ளனர்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறும், பயங்கரவாதத்துக்கு எதிரான எந்தவொரு சட்டத்தையும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சகல தரப்பினருடனான…