அராஜக நிலை ஏற்படாமல் நாட்டை முன்னேற்றுவோம்

சட்டம் சீர்­கு­லைந்­துள்ள நிலையில் நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. எமது அர­சாங்­கத்தில் சட்­டத்தின் ஆட்சி உறு­திப்­ப­டுத்­தப்­படும். சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாட்டில் ஐய­மின்றி வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்­குவோம். அதே­போன்று எதிர்­கா­லத்தில் எந்­த­வித அரா­ஜக நிலையும் ஏற்­ப­டாமல் நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டத்தை நாம் முன்­னெ­டுப்போம் என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்குமான வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன்

தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துடனே தான் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன் வந்துள்ளதாகவும், கடந்த பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் துரிதமாக நியாயம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பிரதான வேட்பாளர்களின் இறுதிதேர்தல் பிரசார கூட்டங்கள் கொழும்பில் ஏற்பாடு

பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளான ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ, சஜித் பிரே­ம­தாஸ, அனு­ர­கு­மார திஸா­நா­யக்க, நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்­டோரின் இறுதி பிரதான தேர்தல் பிர­சாரக் கூட்­டங்களை தலை­நகர் கொழும்பில் இன்­றை­ய­தினம் நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

முஸ்லிம் மக்களுக்காக பேசியவர்கள் நாங்களே

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் நாங்கள் பல்­லா­யிரக் கணக்­கான வீடு­களை அமைத்துக் கொடுத்­துள்ளோம். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு பிற்­பாடு கோட்­டா­பய ஜனா­தி­ப­தி­யானார் அதனால் எங்­களால் ஆரம்­பிக்­கப்­பட்ட வீட்டு திட்டங்கள் இடை­நி­றுத்­தப்­பட்­டன என்று ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிர­ம­தாச தெரி­வித்தார்.