“நிலம் இல்லாத மக்களுக்கு மக்கள் இல்லாத நிலம் வேண்டும்” என்ற உண்மையும் பொய்யும் கலந்த ஒரு கோஷத்தை முன்வைத்து ஆரம்பமாகிய சியோனிசர்களின் நாடு தேடும் படலம் பிரித்தாளும் பிரித்தானியரின் ஆட்சிக்குள் அன்று சிக்கிக் கிடந்த அரபு மக்களின் பலஸ்தீனத்தைப் பங்குபோட்டு இஸ்ரவேல் என்ற ஒரு நாட்டை 1948ல் வென்றெடுக்க வழிகோலியது.
இஸ்ரேல் 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓர் நாடாகும். இதற்கு முன்பு இவ்வாறான ஒரு நாடு இருக்கவில்லை. யுத்தத்துக்கென்றே இந்நாடு உலகில் உருவாக்கப்பட்டது என்று கூறலாம்.